ரஷியாவில் இருந்து முதன்முறையாக நிலவின் தென்துருவத்துக்கு செல்லும் லூனா-25
ரஷியாவில் இருந்து முதன்முறையாக லூனா-25 என்ற பெயரில் நிலவுக்கு மற்றொரு தானியங்கி நிலையத்தை வருகிற 11-ந் தேதி ரஷியா சோயுஸ் 2.1 பி என்ற ராக்கெட் மூலம் அனுப்ப உள்ளது.;
லூனா-24 என்பது சோவியத் ரஷியாவின் விண்வெளி ஆய்வு மையத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒரு திட்டமாகும். இது கடந்த 1976-ம் ஆண்டு நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டது. பின்னர் வெற்றிகரமாக நிலவில் இருந்து 176 கிராம் மண்ணுடன் அதன் காப்ஸ்யூல் பூமிக்கு திரும்பியது.
இந்தநிலையில் லூனா-25 என்ற பெயரில் நிலவுக்கு மற்றொரு தானியங்கி நிலையத்தை வருகிற 11-ந் தேதி ரஷியா சோயுஸ் 2.1 பி என்ற ராக்கெட் மூலம் அனுப்ப உள்ளது. இந்த திட்டம் வெற்றி பெறும்போது நிலவின் தென்துருவத்தில் தரை இறங்கும் முதல் தானியங்கி நிலையமாக இருக்கும் என கூறப்படுகிறது. இதன்மூலம் நிலவில் மென்மையான தரை இறக்க தொழில்நுட்பத்தை சோதனை செய்வது, நீர் உள்பட பல்வேறு வளங்களை ஆராய்வது போன்ற முக்கிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.