'ரஷிய தூதரகம் மூடப்படும்' - ஆஸ்திரேலிய பிரதமர் எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆஸ்கர் ஜென்கின்ஸ் உக்ரைன் ராணுவத்தில் இணைந்து அவர்களுக்கு ஆதரவாக போராடி வந்தார்.;

Update:2025-01-16 06:06 IST

கான்பெரா,

நேட்டோ அமைப்புடன் இணைவதாக கூறிய உக்ரைன் மீது ரஷியா ராணுவம் போர் தாக்குதலை 2022-ம் ஆண்டு தொடங்கியது. சுமார் 3 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த போரில் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்து வருகின்றனர். இருப்பினும் போர் தீவிரம் குறைந்தபாடில்லை.

ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் ஆஸ்கர் ஜென்கின்ஸ் (வயது 32). உக்ரைன் ராணுவத்தில் இணைந்து அவர்களுக்கு ஆதரவாக அங்கு போராடி வந்தார். போரில் ரஷியா ராணுவத்தினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையின்போது ஆஸ்கர் ஜென்கின்ஸ் இறந்ததாக செய்திகள் வெளியாகின.

இந்தநிலையில் ஆஸ்திரேலியாவுக்கான ரஷியா தூதருக்கு ஆஸ்திரேலியா பிரதமர் அலுவலகம் சம்மன் அனுப்பியது. நேரில் ஆஜரான ரஷிய தூதரிடம் பிரதமர் ஆண்டனி அல்பானிஸ் முன்னிலையில் விசாரணை நடத்தினர். அப்போது ஆஸ்கர் ஜென்கின்சின் நிலவரம் குறித்து ஆதாரங்களுடன் கேட்கப்பட்டது. அவர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டால் ரஷியா தூதரகம் மூடப்பட்டு அதிகாரிகள் வெளியேற்றப்படுவர் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்