உக்ரைன்: கார்கிவ் பகுதியில் இருந்து தனது படைகளை திரும்ப பெற்ற ரஷியா

கார்கிவ் நகரத்தில் 2 இடங்களில் உள்ள தங்கள் படைகளை திரும்பப் பெறுவதாக ரஷியா பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

Update: 2022-09-10 15:42 GMT

கீவ்,

உக்ரைனில் ரஷியா கைப்பற்றியுள்ள பகுதிகளை மீட்க, கடந்த வாரம் உக்ரைனின் எதிர்த்தாக்குதல் தொடங்கியது. உக்ரைனின் தெற்கில் இரண்டு குடியேற்றங்களையும், கிழக்கு உக்ரைனில் மூன்றில் ஒரு பகுதியையும் கைப்பற்றியது.

இந்த நிலையில், கார்கிவ் நகரத்தில் 2 இடங்களில் உள்ள தங்கள் படைகளை திரும்பப் பெறுவதாக ரஷியா பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ரஷிய செய்திதொடர்பாளர் இகோர் கொனாஷென்கோவ் கூறுகையில், ரஷிய துருப்புக்கள் பலாக்லியா மற்றும் இஸியம் பகுதிகளிலிருந்து டொனெட்ஸ்க் பகுதிக்கு மீண்டும் ஒருங்கிணைக்கப்படும். கார்கிவ் பகுதியில் ரஷிய படைகளுக்கு இஸியம் ஒரு முக்கிய தளமாக இருந்தது.

டான்பாஸை விடுவிப்பதற்கான சிறப்பு இராணுவ நடவடிக்கையின் இலக்குகளை அடைவதற்காக இது மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உக்ரைனின் கிழக்கு பகுதிகளில் ஒன்றான டான்பாஸை இறையாண்மை மிக்க பகுதியாக ரஷியா அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்