கனடா விமானநிலையத்தில் ரூ.100 கோடி திருட்டு - ஒரு வருடத்திற்கு பின் சிக்கிய கொள்ளை கும்பல்

கனடா விமானநிலையத்தில் கண்டெய்னர் லாரியுடன் ரூ.100 கோடி திருடிய கொள்ளை கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-04-18 00:07 GMT

கோப்புப்படம் 

ஒட்டாவா,

கனடாவின் டொரன்டோ நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு ஏர் கனடா விமானம் மூலம் பிரிங்ஸ் என்ற நிறுவனம் ரூ.100 கோடி மதிப்புள்ள தங்கக்கட்டிகள், ரொக்கப்பணம் ஆகியவற்றை வர்த்தக காரணங்களுக்காக கொண்டு வந்தது. கண்டெய்னர் லாரியில் அவை ஏற்றப்பட்டு அதிகாரிகளின் ஒப்புதலுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

அப்போது மர்மகும்பல் ஒன்று ரூ.100 கோடி பொருட்களுடன் அந்த கண்டெய்னர் லாரியை போலி ஆவணங்கள் சமர்பித்து திருடி சென்றனர். கடந்த ஆண்டு நடந்த இந்த கொள்ளை சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சிக்குள்ளாகியது. இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் கனடா விமானநிலையத்தில் கண்டெய்னர் லாரியுடன் ரூ.100 கோடி திருடிய கொள்ளை கும்பல் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் இருந்து 400 கிலோ தங்கக்கட்டிகள், ரூ.16 கோடி ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கோர்ட்டில் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்