ரஷிய அதிபர் புதின் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த பின் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!

புதினுக்கு புற்று நோய் காரணமாக கடுமையான வயிற்றில் பிரச்சனை ஏற்பட்டதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Update: 2022-12-05 03:45 GMT

மாஸ்கோ,

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதன்காரணமாக அவரது முதுகு தண்டுவடத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

சில மாதங்களாக, புதின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால், அவர் சிரமப்படுவதாகவும் உலக ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. ரஷ்ய அரசாங்கம் இந்த செய்திகளை வதந்திகள் என்று கூறி வருகிறது.

புதினுக்கு புற்று நோய் காரணமாக கடுமையான வயிற்றில் பிரச்சனை ஏற்பட்டதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்தவுடன் அதிர்ச்சியில் அவருக்கு தானாகவே மலம் வெளியேறியிருப்பதாக புதினுக்கு நெருக்கமானவர்கள் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

புதின் விழுந்தவுடன், மூன்று காவலர்கள் அவரைக் கையாண்டு அருகில் இருந்த சோபாவில் உட்கார வைத்தனர். இதையடுத்து அவருக்கு சில மருந்துகள் கொடுக்கப்பட்டன. தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், நடப்பதில் அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறப்பு மருத்துவர்கள் குழு விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், அவர் உடல்நிலை சீராக இருப்பதால், அவர் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்ததற்கு மறுநாள் மாஸ்கோவில் உள்ள ஒரு ஆய்வகத்திற்குச் சென்று அங்குள்ள விஞ்ஞானிகளை சந்தித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்