பாகிஸ்தானில் காகிதத் தட்டுப்பாடு; பாடப்புத்தகங்கள் வழங்குவதில் சிக்கல்

பாகிஸ்தானில் காகிதத் தட்டுப்பாட்டால் பாடப்புத்தகங்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Update: 2022-06-24 13:44 GMT

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் கடுமையான நிதி நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. குறைந்து வரும் அன்னிய செலாவணி கையிருப்பு, அதிகரித்து வரும் திருப்பி செலுத்த வேண்டிய கடன், டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற பல சிக்கல்களை அந்த நாடு எதிர் கொண்டு வருகிறது.

இந்நிலையில், பணவீக்கம் மற்றும் பொருளாதார சூழல் காரணமாக பாகிஸ்தானில் தற்போது காகிதத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வரும் கல்வியாண்டில் மாணவர்களுக்கு புத்தகங்களை விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அந்நாடு காகித உற்பத்தி அமைப்பானது தெரிவித்துள்ளது.

காகிதத்தின் விலையானது உயர்ந்து கொண்டே வருவதால் புத்தகங்களுக்கு விலை நிர்ணயிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தானின் சிந்து, பஞ்சாப், கைபர் பகுதியில் இருக்கும் பாடப்புத்தக அமைப்பானது புத்தகங்களை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என அந்நாட்டு உள்ளூர் செய்தி நிறுவனமானது தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்