'பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல்' - ராஜ்நாத் சிங் பேச்சுக்கு பாகிஸ்தான் கண்டனம்

இந்தியாவின் சொல்லாட்சிகள் பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.

Update: 2023-07-28 00:29 GMT

இஸ்லாமாபாத்,

இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த 1999-ம் ஆண்டு நடந்த கார்கில் போரில் வெற்றி பெற்றதன் 24-வது நினைவு தினம் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி லடாக்கில் உள்ள கார்கில் போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய ராஜ்நாத் சிங் அங்கு ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது அவர், நாட்டின் கண்ணியத்தையும், கவுரவத்தையும் பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்வோம் என்றும் தேவை ஏற்பட்டால் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை கடந்து சென்று தாக்க தயாராக இருப்பதாகவும் கூறினார். இந்த நிலையில் ராஜ்நாத் சிங்கின் இந்த பேச்சுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவின் போர்க்குணமிக்க சொல்லாட்சிகள் பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாலும், தெற்காசியாவின் அமைதி சூழலை சீர்குலைப்பதில் பங்களிப்பதாலும் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுமாறு நாங்கள் இந்தியாவுக்கு ஆலோசனை கூறுகிறோம்" என கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்