நியூயார்க் மிஸ் இலங்கை அழகுப் போட்டியில் நடைபெற்ற மோதல்...!
நியூயார்க் மிஸ் இலங்கை அழகுப் போட்டியில் நடைபெற்ற விருந்தில் மோதல் ஏற்பட்டது.;
நியூயார்க்
நியூயார்க் நகரின் முதல் மிஸ் இலங்கை அழகுப் போட்டி நடைபெற்றது.இலங்கை மக்கள் அதிகம் வசிக்கும் சவுத் பீச்சில் உள்ள வாண்டர்பில்ட்டில் இது நடைபெற்றது.
இலங்கையின் பொருளாதார பின்னடைவை தொடர்ந்து இலங்கை மருத்துவமனை ஒன்றுக்கு பணம் திரட்டும் முயற்சியில் ஈடுபட்ட ஸ்டேட்டன் ஐலண்ட் போட்டிக்கு 300க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் வந்திருந்தனர்.
ஏஞ்சலியா குணசேகர இந்த போட்டியில் நியூயார்க் மிஸ் இலங்கையாக தேர்ந்து எடுக்கப்பட்டார்.
நிகழ்ச்சிக்கு பிறகு நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியின் போது இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். இதுகுறித்த வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது.