நைஜர் ராணுவ ஆட்சிக்கு ஒத்துழைப்பு கிடையாது - அமெரிக்கா
நைஜர் அரசாங்கத்துடனான பாதுகாப்பு மற்றும் பிற ஒத்துழைப்பை அமெரிக்கா நிறுத்தக்கூடும் என வெள்ளைமாளிகை செய்தித்தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்தார்.;
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் அதிபர் முகமது பாசும் தலைமையிலான ஆட்சி நடந்து வந்தது. ஆனால் அந்த நாட்டின் ராணுவம் அவரை சிறைபிடித்து ஆட்சி கவிழ்க்கப்பட்டது. பின்னர் நைஜரில் ராணுவ ஆட்சியை கொண்டு வந்ததாக அரசு தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தனர். ராணுவத்தின் இந்த செயலுக்கு ஐ.நா. சபை மற்றும் சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்தன.
இந்தநிலையில் ராணுவத்தின் இந்த நடவடிக்கைகள் மூலம் அங்கு ஸ்திரத்தன்மை குறைந்து பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. எனவே நைஜர் அரசாங்கத்துடனான பாதுகாப்பு மற்றும் பிற ஒத்துழைப்பை அமெரிக்கா நிறுத்தக்கூடும் என வெள்ளைமாளிகை செய்தித்தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்தார்.