ஹவாய் தீவில் கடலில் பாய்ந்த கடற்படை விமானம்..!

அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதுமில்லை. பயணிகள் அனைவரும் காயங்கள் ஏதுமின்றி கடலில் நீந்தி கரை சேர்ந்தனர்.

Update: 2023-11-22 09:35 GMT

நியூயார்க்:

அமெரிக்காவின் ஹவாய் மாநிலம், ஓஹு தீவின் கெனோஹே கடற்கரை பகுதியில் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான விமான தளம் ஒன்று உள்ளது. இந்த தளத்திற்கு வாஷிங்டன் மாநிலம் விட்பி தீவில் இருந்து 9 பயணிகளுடன் போயிங் போஸிடான் 8-ஏ ரக அமெரிக்க கண்காணிப்பு விமானம் ஒன்று சென்றது.

விமான தளத்தில் தரையிறங்க முற்பட்டபோது கட்டுப்பாட்டை இழந்து வேகமாக சென்றது. ஓடுபாதையை தாண்டி வேகமாக சென்ற விமானம், எதிர்பாராதவிதமாக கடல்நீரில் இறங்கியது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதுமில்லை. பயணிகள் அனைவரும் காயங்கள் ஏதுமின்றி கடலில் நீந்தி கரை சேர்ந்தனர்.

கருமேகங்கள் மற்றும் மழையினால் ஓடுபாதை விமானிக்கு தெளிவாக தெரியவில்லை என்றும் இதனால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்த விமானத்தில் இருந்து எரிபொருள் உள்ளிட்ட அபாயகரமான பொருட்கள் ஏதும் கடல் நீரில் கலந்து விடாமல் தடுக்கும் விதமாக கடல் நீரில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்