உக்ரைன்-ரஷியா போரில் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவதாக ஜோ பைடன் உறுதி
உக்ரைன்-ரஷியா போரில் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவதாக ஜோ பைடன் உறுதியளித்தார்.
வாஷிங்டன்,
ரஷியா-உக்ரைன் இடையே கடந்த 16 மாதங்களாக போர் நடைபெற்று வருகிறது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் சப்ளை, பொருளாதார உதவிகளை செய்து வருகின்றன.
இந்தநிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது போரின் தற்போதைய நிலவரம், உக்ரைனின் எதிர் தாக்குதல் போன்றவை குறித்தும், ரஷியாவில் வாக்னர் என்ற தனியார் கூலிப்படையினர் அரசாங்கத்துக்கு எதிராக திரும்பியது குறித்தும் இருவரும் விவாதித்ததாக வெள்ளை மாளிகை தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. மேலும் உக்ரைனுக்கு பொருளாதாரம், மனிதாபிமான உதவிகள் உள்ளிட்ட ஆதரவை தொடர்ந்து வழங்குவதாகவும் ஜோ பைடன் அப்போது உறுதியளித்தார்.