பானிபூரியை ரசித்து ருசித்து, சாப்பிட்ட ஜப்பான் பிரதமர் கிஷிடா..!

இரு தலைவர்களுக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Update: 2023-03-21 01:30 GMT

புதுடெல்லி,


ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அரசுமுறை பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின், டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜப்பான் பிரதமர் கிஷிடா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 


தலைநகர் டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவை சந்தித்தார். இதையடுத்து இரு தலைவர்களுக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவுக்கு கர்நாடக கலையைப் போற்றும் விதமாக மரப்பெட்டியில் சந்தன மர புத்தர் சிலையை வைத்து அதனை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார்.


அதனை தொடர்ந்து டெல்லியில் உள்ள புத்த ஜெயந்தி பூங்காவுக்கு சென்ற ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா பிரதமர் மோடியுடன் பூங்காவை பார்வையிட்டார். பின்னர் அங்கே அமைக்கப்பட்டிருந்த பானி பூரி கடையில் பிரதமர் மோடியுடன் சேர்ந்து ஜப்பான் பிரதமர் கிஷிடா பானி பூரியை ரசித்து ருசித்து சாப்பிட்டு மகிழ்ச்சி அடைந்தார். மேலும் மாம்பழ பன்னா மற்றும் லஸ்ஸியையும் பருகினார். அதைத்தொடர்ந்து பூங்காவில் உள்ள பால் போதி மரத்தை இருவரும் பார்வையிட்டனர்.



Full View


Tags:    

மேலும் செய்திகள்