பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது மேலும் ஒரு வழக்கு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது போலீசார் பயங்கரவாத வழக்கு ஒன்றையும் பதிவு செய்துள்ளனர்.

Update: 2023-03-19 20:21 GMT

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பரிசுப்பொருள் மோசடி வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அத்துடன் பெண் நீதிபதியை மிரட்டியதாக மற்றொரு வழக்கும் பதிவாகி உள்ளது. இந்த வழக்குகளில் அவருக்கு பிரவாரண்டு பிறப்பிக்கப்பட்ட நிலையில், இஸ்லாமாபாத் கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வரும் பரிசுப்பொருள் மோசடி வழக்கின் விசாரணைக்கு நேற்று முன்தினம் அவர் ஆஜரானார்.

முன்னதாக அவரை கைது செய்ய லாகூரில் உள்ள அவரது பங்களாவுக்கு 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட போலீசார் சென்றனர். அப்போது இம்ரான்கானின் பி.டி.ஐ. கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 25-க்கு மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இந்த நிலையில் இம்ரான்கான் மீது போலீசார் நேற்று பயங்கரவாத வழக்கு ஒன்றையும் பதிவு செய்தனர். இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைப்போல இம்ரான்கான் வீட்டில் நடந்த வன்முறை தொடர்பாக, அவரது கட்சித்தலைவர்கள் சுமார் 17 பேர் உள்பட ஏராளமான தொண்டர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக சுமார் 18 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்