'சர்வதேச நாடுகளை விட இந்தியாவின் கார்பன் வெளியீடு மிக குறைவாக உள்ளது' - பிரதமர் மோடி

இந்தியாவின் கார்பன் வெளியேற்றம் 4 சதவீதமாக உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்தார்.

Update: 2023-12-01 11:27 GMT

துபாய்,

துபாயில் நடைபெற்ற சர்வதேச காலநிலை நடவடிக்கை உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"இந்தியாவின் மக்கள் தொகை உலக மக்கள் தொகையில் 17 சதவீதம் ஆகும். ஆனால் உலகளாவிய கார்பன் வெளியேற்றத்தைப் பொறுத்தவரை இந்தியாவின் கார்பன் வெளியேற்றம் 4 சதவீதமாக மட்டுமே உள்ளது.

மக்கள்தொகை குறைவாக உள்ள மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் கார்பன் வெளியேற்றம் மிகவும் குறைவு. காலநிலை சார்ந்த இலக்குகளை அடைவதில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது."

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்