துபாயில் சாலை விபத்து ஏற்படுத்தியதற்காக இந்தியருக்கு ரூ.18 லட்சம் அபராதம் விதிப்பு

துபாயில் சாலை விபத்தில் 2 பெண்கள் பலியான சம்பவத்தில் இந்தியருக்கு ரூ.18 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-12-24 03:07 GMT



துபாய்,


துபாய் நாட்டில் அல்-பர்ஷா பகுதியில் வங்காளதேச நாட்டை சேர்ந்த ஒருவர் முக்கிய சாலையில் மைய பகுதியில் காரை நிறுத்தியுள்ளார். பின்பு திடீரென அதனை பின்னோக்கி செலுத்தி உள்ளார். மற்றொரு காரில் வந்த இந்தியர் ஒருவர் அதனை கவனிக்காமல் வந்து, அந்த கார் மீது மோதி உள்ளார்.

இதன்பின்பு, 2 கார்களும் மற்றொரு கார் மீது மோதி பெரும் விபத்து ஏற்படுத்தி உள்ளது. இதில், சவுதி அரேபியாவை சேர்ந்த குடும்பம் ஒன்று சிக்கியது. இந்த விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர்.

இதுபற்றிய வழக்கு ஒன்று துபாய் போக்குவரத்து நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதன் மீது நடந்த விசாரணையில், வங்காளதேசம் மற்றும் இந்தியாவை சேர்ந்த 48 வயதுடைய கார் ஓட்டுனர்களான 2 பேருக்கும் சாலை விபத்து ஏற்படுத்தியதற்காக மொத்தம் ரூ.90 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

அவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்காக இந்த அபராத தொகையை செலுத்த வேண்டும். இதன்படி, இந்தியர் ரூ.18 லட்சம் அபராத தொகையை செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்