பாகிஸ்தானில் கால்நடை எண்ணிக்கை அதிகரிப்பு
கடந்த நிதியாண்டை காட்டிலும் கால்நடைகள் எண்ணிக்கை பாகிஸ்தானில் கணிசமாக உயர்ந்துள்ளது.;
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானில் கால்நடை கணக்கெடுப்பை நடத்த நீதித்துறை அமைச்சகம் முடிவு செய்தது. அதன்படி பாகிஸ்தான் நீதி மந்திரி முகமது அவுரங்கசீப் கால்நடை கணக்கெடுப்பு அறிக்கையை நாடாளுமன்றத்தில் பதிவு செய்தார்.
மேலும் அந்த கணக்கீட்டின்படி நாட்டில் 8¾ கோடி வெள்ளாடுகள், 3 கோடி செம்மறி ஆடுகள், காளைகள் மற்றும் எருமைகள் 4½ கோடி, பசுக்கள் 5½ கோடி மற்றும் 59 லட்சம் கழுதைகள் உள்ளது தெரியவந்துள்ளது.
1 கோடி. ஒட்டகங்களும், 30 லட்சம் குதிரைகளும் பாகிஸ்தானில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டை காட்டிலும் கால்நடைகள் எண்ணிக்கை பாகிஸ்தானில் கணிசமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.