'இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல் வெறுக்கத்தக்க செயல்' - ஆஸ்திரேலிய பிரதமர் கண்டனம்

இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2023-10-08 14:31 GMT

சிட்னி,

இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் பயங்கரவாத குழு நடத்திய திடீர் ஏவுகணை தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து காசா முனையில் ஹமாஸ் குழுவினரின் இருப்பிடங்கள் மீது இஸ்ரேல் பாதுகாப்புப்படை தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை இஸ்ரேல் ராணுவ தாக்குதலில், 400-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகேரி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல் வெறுக்கத்தக்க செயல் என்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இந்த நேரத்தில் இஸ்ரேலுடன் ஆஸ்திரேலியா துணை நிற்கிறது. ஹமாஸ் அமைப்பின் பாரபட்சமற்ற, வெறுக்கத்தக்க தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறோம். தங்களை தற்காத்துக் கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு உள்ளது" என்று தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்