உலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 52.11 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 56.93 கோடியாக உயர்ந்து உள்ளது.

Update: 2022-07-20 02:17 GMT



வாஷிங்டன்,



உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்புகள் முதன்முறையாக சீனாவின் உகான் நகரில் 2019-ம் ஆண்டு டிசம்பரில் கண்டறியப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 226 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 கோடியே 93 லட்சத்து 96 ஆயிரத்து 589 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 54 கோடியே 6 லட்சத்து 34 ஆயிரத்து 659 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 63 லட்சத்து 91 ஆயிரத்து 352 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் ஒரே நாளில் 75,397 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த எண்ணிக்கை 9,15,29,862 ஆக உள்ளது. ஒரே நாளில் தொற்று பாதிப்புக்கு 299 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த வரிசையில் இந்தியா (4,38,00,251) 2வது இடத்தில் உள்ளது. பாதிப்பு எண்ணிக்கையில் 3வது இடத்தில் உள்ள பிரேசிலில் 58,225 பேருக்கு ஒரே நாளில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மொத்த எண்ணிக்கை 3,33,98,040 ஆக உள்ளது. 378 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இதேபோன்று பிரான்சில் 1,34,188 பேருக்கும், இத்தாலி நாட்டில் 1,20,683 பேருக்கும் அதிக அளவாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்