உக்ரைனுக்கு 18.4 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவி வழங்கும் ஜி7 நாடுகள்
போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு ஜி7 நாடுகள் 18.4 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவி வழங்குகிறது.
ஜெர்மனி,
உக்ரைன் மீது ரஷியா போரில் ஈடுபட்டு வருகிறது. இதனால், உக்ரைன் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. அந்நாட்டு மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு தஞ்சமடைந்து வருகின்றனர்.
எனினும் உக்ரைனுக்கு அமெரிக்கா போன்ற நாடுகள் தேவையான நிதி உதவி அளித்து வருகின்றன. இந்த நிலையில், உக்ரைனுக்கு உதவி ஜி7 கூட்டமைப்பு நாடுகள் முன்வந்துள்ளன.
போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரேனிய மக்களுக்கு அடிப்படை தேவையை நிறைவேற்றுவதை உறுதிசெய்வதற்காக இந்த நிதி வழங்குவதாக ஜி7 கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.