மக்களுக்கு இலவச ரெயில் பயணம் - ஸ்பெயின் அரசு அதிரடி உத்தரவு
பொதுமக்கள் அரசு போக்குவரத்தை அதிக அளவில் பயன்படுத்த, அந்நாட்டு அரசு ரயில் போக்குவரத்தை இலவசம் என அறிவித்துள்ளது.
ஸ்பெயின்,
ஸ்பெயினில் விலைவாசி உயர்வு, பண வீக்கம் அதிகரிப்பு போன்ற காரணங்களால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இந்நிலையில் பொதுமக்கள் அரசு போக்குவரத்தை அதிக அளவில் பயன்படுத்த, அந்நாட்டு அரசு ரயில் போக்குவரத்தை இலவசம் என அறிவித்துள்ளது. இதன் மூலம், நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்கள் பெருமளவு பயனடைவர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஸ்பெயின் அரசின் முடிவுக்கு, அந்நாட்டு மக்கள் மிகுந்த வரவேற்பு அளித்துள்ளனர்.