அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக கடற்படை தலைமை தளபதியாக பெண் நியமனம்...!

அமெரிக்க கடற்படை தலைமை தளபதியாக லிசா பிரான்செட்டி என்ற பெண்ணை அதிபர் ஜோ பைடன் நியமனம் செய்துள்ளார்.

Update: 2023-07-22 09:20 GMT

வாஷிங்டன்,

அமெரிக்காவின் வரலாற்றில்  முதல் முறையாக அந்நாட்டின் கடற்படை தலைமை தளபதியாக லிசா பிரான்செட்டி என்ற பெண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போது கடற்படையின் துணை தலைவியாக லிசா பணியாற்றி வரும் நிலையில் அவரை கடற்படை தலைமை தளபதியாக அதிபர் ஜோ பைடன் நியமனம் செய்துள்ளார்.

இந்த நியமனத்தின் மூலம் அமெரிக்க கடற்படை வரலாற்றில் முதல் பெண் உயர் அதிகாரி மற்றும் முதல் பெண் கூட்டுப்படை தலைவி என்ற பெருமையை லிசா பெற்றுள்ளார். இவரது நியமனத்திற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Full View

 

Tags:    

மேலும் செய்திகள்