டுவிட்டர் பங்குகளை வாங்கும் ஒப்பந்தத்தைத் தொடர முன்வந்த எலான் மஸ்க்..!!
டுவிட்டர் பங்குகளை வாங்கும் ஒப்பந்தத்தைத் தொடர எலான் மஸ்க் முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வாஷிங்டன்,
உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், சமூக ஊடக நிறுவனமான டுவிட்டரை, ரூ.3.34 லட்சம் கோடிக்கு வாங்க உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவித்தார். இதற்கான ஒப்பந்தம் நிறைவடையவில்லை. டுவிட்டரில் போலி கணக்குகள் உள்ளது என்ற ஆதாரத்தை நிரூபிக்காததால் டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக எலான் மஸ்க் அறிவித்தார். இது தொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், டுவிட்டரின் ஒரு பங்கிற்கு 54.20 டாலருக்கு ஒப்பந்தத்தை தொடர முன்வந்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. எலான் மஸ்க்கின் இந்த அறிவிப்பை தொடர்ந்து டுவிட்டர் நிறுவனத்தின் வர்த்தகம் இடைநிறுத்துவதற்கு முன்பு, பங்குகள் 13% அதிகரித்து 47.95 டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.