மொசாம்பிக் நாட்டை தாக்கிய புயல்: 73 பேர் பலி
மொசாம்பிக் நாட்டை தாக்கிய புயலில் சிக்கி 73 பேர் உயிரிழந்தனர்.
மபுடோ,
கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மொசாம்பிக். இந்திய பெருங்கடல் பகுதியில் மடகாஸ்கர் அருகே அமைந்துள்ள மொசாம்பிக் நாட்டை சிடோ என்ற புயல் தாக்கியது.
புயல் காரணமாக காற்று 26 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியது. மேலும், நேற்று ஒரேநாளில் 250 மில்லிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது.
புயலால் 39 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன. மேலும், புயல், மழையால் 3 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மொசாம்பிக் நாட்டை தாக்கிய சிடோ புயலில் சிக்கி 73 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக அந்நாட்டின் கபா டெல்கொடா மாகாணத்தில் மட்டும் 66 பேர் உயிரிழந்துள்ளனர். புயலால் 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். புயல் கரையை கடந்துள்ள நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.