இந்திய பெருங்கடலில் வணிக கப்பல் மீது டிரோன் தாக்குதல்: கடற்படை கப்பல்கள் விரைவு
கப்பலில் பற்றிய தீ அணைக்கப்பட்ட போதிலும் கப்பலின் இயக்கம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.;
புதுடெல்லி,
இந்திய பெருங்கடலில் கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு சென்று இருந்த கப்பல் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சவுதியில் இருந்து மங்களூருக்கு வந்து கொண்டிருந்த எம்.வி செம் என்ற கப்பல் மீதுதான் டிரோன் தாக்குதல் நிகழ்த்தப்பட்டு இருக்கிறது. போர்பந்தரில் இருந்து 217 நாட்டிக்கல் மைல் தொலைவில் வந்தபோது நடத்தப்பட்ட தாக்குதலில் கப்பலில் தீ பிடித்துள்ளது.
கப்பலில் பற்றிய தீ அணைக்கப்பட்ட போதிலும் கப்பலின் இயக்கம் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கப்பலில் பயணம் செய்த அனைத்து சிப்பந்திகளும் பத்திரமாக இருப்பதாகவும் கப்பலுக்கு உதவ அப்பகுதியில் உள்ள அனைத்து கப்பல்களையும் கடற்படை அலர்ட் செய்து இருப்பதாகவும் ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.