பிரேசிலில் 13 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

பிரேசிலின் சாவோ பவுலோ நகரத்தில் 13 பயங்கரவாதிகள் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Update: 2023-08-02 20:13 GMT

கோப்புப்படம்

சாவோ பவுலோ,

தென் அமெரிக்க நாடான பிரேசிலின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாக சாவோ பவுலோ உள்ளது. இங்குள்ள கவுருஜா மற்றும் சான்டோஸ் பகுதிகளில் சமூக விரோத செயல்கள் அதிக அளவில் நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் சம்பவ இடத்தில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டபோது பயங்கரவாதிகள் சிலரால் போலீஸ்காரர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதனையடுத்து தப்பியோடிய பயங்கரவாதிகளை கைது செய்யும் நடவடிக்கையில் அங்கு ராணுவம் களம் இறங்கப்பட்டது. சுமார் 600-க்கும் மேற்பட்ட சிறப்பு படை வீரர்கள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்பேரில் இதுவரை 13 பயங்கரவாதிகளை அந்த நாட்டின் சிறப்பு ராணுவ பிரிவினர் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றனர். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆயுத குவியல்கள், போதை பவுடர் பாக்கெட்டுகள் உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டு ராணுவத்தினர் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்