நியூசிலாந்து பொதுத்தேர்தலில் ஆளும் கட்சி தோல்வி; எதிர்க்கட்சி தலைவர் புதிய பிரதமராகிறார்

நியூசிலாந்தில் பொதுத்தேர்தல் நடந்து முடிந்தது. எதிர்க்கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற கிறிஸ்டோபர் லக்சன் நாட்டின் புதிய பிரதமராகிறார்.

Update: 2023-10-14 16:34 GMT

பிரதமர் தேர்தல்

நியூசிலாந்து நாட்டின் பிரதமராக இருந்த ஜெசிந்தா ஆர்டன் கடந்த ஜனவரி மாதம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். கொரோனா தொற்று நடவடிக்கை, ஊழல் குற்றச்சாட்டு போன்ற காரணங்களால் பொதுமக்களின் நம்பிக்கையை இழந்தநிலையில் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். 9 மாதங்கள் கடந்தநிலையில் நாட்டின் 54-வது நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆளும் தொழிலாளர் கட்சி சார்பில் கிறிஸ் ஹிப்கின்ஸ் பிரதமர் பதவிக்காக வேட்புமனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து தேசிய கட்சி சார்பில் அதன் தலைவர் கிறிஸ்டோபர் லக்சன் என்பவர் போட்டியிடுவதாக அறிவித்தார்.

தேர்தல் வாக்குறுதிகள்

இரு கட்சிக்களுக்கும் பெரும்பான்மை குறைவு என்பதால் கூட்டணி கட்சி எம்.பி.க்களை சார்ந்து களம் இறங்கினர். நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்று சூறாவளி பிரசாரம் மேற்கொண்டனர். இதனால் தேர்தல்களம் சூடுபிடிக்க ஆரம்பித்தது.

தேர்தல் வாக்குறுதிகளாக பணவீக்கம் மற்றும் அண்ணிய செலாவணி கட்டுப்பாடு, சர்வதேச நாடுகள் உடனான நட்புறவு ஆகியவற்றை ஹிப்கின்ஸ் எடுத்துரைத்தார். மேலும் கல்வி, தொழில் ஆகியவற்றை மேம்படுத்துவதாகவும் கூறினார். கிறிஸ்டோபர் லக்சன் நாட்டின் அரசியல் திட்டங்கள் வகுப்பதில் பூர்வக்குடிகளின் பங்கு, வரி குறைப்பு, இலவச பல் மருத்துவம் ஆகியவற்றை வழங்குவதாக அறிவித்தார்.

எதிர்க்கட்சி வெற்றி

இந்தநிலையில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் அறிவித்தப்படி வெற்றிகரமாக நடந்து முடிந்தது. மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் வாக்களித்தனர். வாக்கெடுப்பு நடந்து முடிந்து ஓட்டு எண்ணிக்கை உடனடியாக நடத்தப்பட்டது. இதில் ஆளுங்கட்சியான தொழிலாளர் கட்சி 26 சதவீத வாக்கு எண்ணிக்கையை பெற்றது. அதனை எதிர்த்த தேசிய கட்சி 40 சதவீதத்திற்கும் அதிகமான வாக்கு சதவீதத்தை பெற்றது. மேலும் அதனின் கூட்டணி கட்சியான அக்ட் கட்சி 10 தொகுதிகளை வென்றது. இதனால் வலதுசாரி கட்சியான தொழிலாளர்-அக்ட் கூட்டணி அபாரமாக தேர்தலை வென்று உள்ளது.

புதிய பிரதமர்

முன்னாள் தொழில் அதிபரான கிறிஸ்டோபர் லக்சன்(வயது 53) கடந்த 2020-ம் ஆண்டு தொழிலாளர் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு கட்சி பணியாற்றினார். அப்போதைய தேர்தலில் எம்பி.யாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2022-ம் ஆண்டு கட்சியின் தலைவராக பதவி வகித்தார். தேர்தலில் வெற்றிப்பெற்றுள்ள அவர் நாட்டின் 42-வது பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்