2022ல் சீனாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 3 சதவீதம் சரிவு...!

2022ல் சீனாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 3 சதவீதமாக சரிந்துள்ளது.

Update: 2023-01-27 17:23 GMT

ஜெனீவா,

சீனாவின் பொருளாதார மந்தநிலை உலகம் முழுவதும் சிற்றலையை உருவாக்கக் கூடும் என்று ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. அந்நாட்டின் வருடாந்திர மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 2022 இல் 3 சதவீதமாக சரிந்துள்ளது.

5.5 சதவீத இலக்கை விட குறைவாக பதிவான நிலையில், சீனாவின் பொருளாதார மந்தநிலை உலகம் முழுவதும் சிற்றலையை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில், அனைத்து விதமான எதிர்பாராத நிகழ்வுகளையும் சீனா கடந்து வந்துள்ளதாக சீனாவின் துணைப் பிரதமர் லியு ஹீ, உலகப் பொருளாதார மன்றத்தில் கவலை தெரிவித்தார்.

கொரோனா பரவல் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், 2022 அக்டோபரில் பன்னாட்டு நிதியம் வெளியிட்ட கணிப்புகளை விட சீனாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி சற்று குறைவாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்