கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கொரோனா பாதிப்பு
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒட்டாவா,
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே தடுப்பூசி போட்டிருந்ததால் தற்போது நன்றாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "எனக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் பொது சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். நான் ஏற்கனவே தடுப்பூசி செலுத்தி இருந்ததால், தற்போது நன்றாக இருப்பதை உணர்கிறேன், எனவே, நீங்கள் தடுப்பூசி போடவில்லை என்றால், கண்டிப்பாக தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும். நமது சுகாதார அமைப்பையும், மற்றவர்களையும் மற்றும் நம்மையும் பாதுகாப்போம்" என்று அதில் ஜஸ்டின் ட்ரூடோ பதிவிட்டுள்ளார்.
கடந்த வாரம், கலிபோர்னியாவில் நடந்த அமெரிக்காவின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட ஜஸ்டின் ட்ரூடோ, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்தார். குடியேற்றம் உள்பட அந்த நாடுகளைப் பாதிக்கும் பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்க பிராந்தியத்தைச் சேர்ந்த தலைவர்கள் கூடியது குறிப்பிடத்தக்கது.