பிரேசில்: கொரியாவின் பாரம்பரிய ஆடையில் அலங்கரிக்கப்பட்ட 'மீட்பர்' இயேசு சிலை

'மீட்பர்' இயேசு கிறிஸ்துவின் சிலை கொரியாவின் பாரம்பரிய ஆடையால் வண்ண விளக்குகள் மூலம் அலங்கரிக்கப்பட்டது.

Update: 2024-06-09 08:36 GMT

பிரேசிலியா,

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் வருகிற நவம்பர் மாதம் ஜி-20 உச்சிமாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அங்கு மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் `லைட்ஸ் ஆப் கொரியா' என்ற கண்காட்சியின் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பிரேசிலின் புகழ்பெற்ற `கிறிஸ்ட் தி ரிடீமர்' எனப்படும் 'மீட்பர்' இயேசு கிறிஸ்துவின் சிலை கொரியாவின் பாரம்பரிய ஆடையால் வண்ண விளக்குகள் மூலம் அலங்கரிக்கப்பட்டது. இதனை ஏராளமானோர் கண்டுகளித்தனர். இந்த வண்ண விளக்குகள் தென் கொரிய ஆடை வடிவமைப்பாளர் ஜின் ஹீ லீயால் திட்டமிடப்பட்டது.

இந்த இயேசு கிறிஸ்துவின் சிலை மற்றொரு நாட்டின் பாரம்பரிய ஆடையில் அலங்கரிக்கப்படுவது இதுவே முதன்முறை ஆகும். இது இரு நாடுகள் இடையேயான உறவில் உள்ள நெருக்கத்தை காட்டுகிறது. கடந்த 1931-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட 'மீட்பர்' இயேசு சிலையானது 98 அடி(30 மீட்டர்) உயரம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்