அமெரிக்க வெள்ளை மாளிகையில் முதல் பெண் தலைமை அதிகாரி நியமனம்

பெண் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள சூசி வைல்ஸ் விளையாட்டு வீரர் பாட் சம்மரலின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Update: 2024-11-08 16:01 GMT

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இதன் தொடர்ச்சியாக அமெரிக்க வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரியாக டிரம்பின் பிரசார மேலாளராக இருந்து வந்த 69 வயதான சூசி வைல்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டுள்ளார். சூசி வைல்ஸ் வெள்ளை மாளிகையில் பணியாற்றும் முதல் பெண் தலைமை அதிகாரி ஆவார். இவர் சிறந்த கால் பந்து வீரரும், விளையாட்டு வீரருமான பாட் சம்மரலின் மகள் ஆவார். இது தொடர்பாக டிரம்ப் கூறும் போது,

அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய அரசியல் வெற்றிகளில் ஒன்றை அடைய எனக்கு சூசி வைல்ஸ் உதவினார். அவர் கடின உழைப்பாளி, புத்திசாலி. உலகளவில் போற்றப்படுபவர். அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக மாற்ற அவர் அயராது உழைப்பார் என தெரிவித்து உள்ளார். அமெரிக்க வரலாற்றில் பெண் ஒருவர் இந்த பதவிக்கு வருவது இதுவே முதல்முறையாகும்.

Tags:    

மேலும் செய்திகள்