அமெரிக்காவில் நடுவானில் விமான என்ஜின் தகடு பெயர்ந்து பறந்ததால் பரபரப்பு

அமெரிக்காவில் நடுவானில் விமானத்தின் என்ஜின் தகடு பெயர்ந்து பறந்ததால், அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

Update: 2024-04-08 21:36 GMT

வாஷிங்டன்,

அமெரிக்காவின் கொலராடோ மாகாணம் டென்வர் விமான நிலையத்தில் இருந்து ஹூஸ்டனுக்கு போயிங் 737 விமானம் ஒன்று புறப்பட்டது. சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானத்தில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பின்னர் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அந்த விமானத்தின் என்ஜின் அருகே தடுப்பாக இருக்கும் தகடு பெயர்ந்து காற்றில் பறந்தது. இதுகுறித்து விமானி உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

இதனையடுத்து அந்த விமானம் டென்வர் விமான நிலையத்துக்கே திரும்பி தரையிறங்கியது. அதில் இருந்த பயணிகள் அனைவரும் மற்றொரு விமானம் மூலம் அங்கிருந்து ஹூஸ்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிதுநேரம் பதற்றம் நிலவியது.

இந்த சம்பவம் குறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags:    

மேலும் செய்திகள்