மெக்காவில் வீசிய வெப்ப அலை: ஹஜ் யாத்ரீகர்கள் 550 பேர் பலி

மெக்காவில் வீசிய வெப்ப அலைக்கு ஹஜ் யாத்ரீகர்கள் 550 பேர் உயிரிழந்தனர்.

Update: 2024-06-19 08:05 GMT

ரியாத்,

இஸ்லாமிய மதத்தினர் சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா மதினாவுக்கு ஹஜ் புனித யாத்திரை செல்வதை தங்கள் முக்கிய மதக்கடமைகளில் ஒன்றாக கருதுகின்றனர். அதன்படி, ஆண்டுதோறும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து மெக்கா மதினாவுக்கு இஸ்லாமிய மதத்தினர் புனிதப்பயணம் மேற்கொள்கின்றனர்.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஹஜ் புனிதப்பயணம் தொடங்கிய நிலையில் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த இஸ்லாமிய மதத்தினர் சவுதி அரேபியாவின் மெக்காவில் குவிந்து வருகின்றனர்.

அதேவேளை, சவுதி அரேபியாவின் மெக்காவில் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. வெப்பம் காரணமாக ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ள யாத்ரீகர்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த ஆண்டு மெக்கா மதினாவுக்கு புனிதப்பயணம் மேற்கொண்ட யாத்ரீகர்களில் 550 பேர் வெப்ப அலை காரணமாக உயிரிழந்துள்ளனர். கடுமையான வெப்பம் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு 550 யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 323 பேர் எகிப்து நாட்டை சேர்ந்த யாத்ரீகர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்