வங்காளதேசத்தில் ரெயில்கள் மோதி தடம் புரண்டதில் 12 பேர் படுகாயம்
வங்காளதேசத்தில் ரெயில்கள் மோதி தடம் புரண்டதில் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
டாக்கா,
வங்காளதேசத்தில் துறைமுக நகரமான சட்டோகிராமில் இருந்து தலைநகரான டாக்காவுக்கு பயணிகள் ரெயில் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த ரெயில் ஹசன்பூர் ரெயில் நிலையத் தில் பயணிகளை ஏற்றுவதற்காக நின்று, கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அதே தண்டவாளத்தில் வந்த சரக்கு ரெயில் பயணிகள் ரெயில் மீது மோதியது.
இதில் பயணிகள் ரெயிலின் 5 பெட்டிகளும், சரக்கு ரெயிலின் 2 பெட்டிகளும் தடம் புரண்டன. இந்த விபத்தில் 12 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் ரெயில்வே ஊழியர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தால் இந்த வழித்தடத்தில் செல்ல வேண்டிய பல ரெயில்கள் இதனால் மணிக்கணக்கில் தாமதமாக சென்றன.