இங்கிலாந்தில் ராணுவ மந்திரி ராஜினாமா; புதிய ராணுவ மந்திரி நியமனம்
இங்கிலாந்தில் ராணுவ மந்திரி ராஜினாமா செய்த நிலையில், புதிய ராணுவ மந்திரி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
லண்டன்,
இங்கிலாந்தில் பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிய உள்ளதால் அங்கு விரைவில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே அங்கு அமைச்சரவை மறுசீரமைப்பு செய்யப்படுகிறது. அதன்படி கடந்த 4 ஆண்டுகளாக ராணுவ மந்திரியாக பணியாற்றிய பென் வாலஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். உக்ரைன் போரில் இங்கிலாந்து ராணுவத்தின் முடிவுகளை மேற்பார்வை செய்வதில் இவர் திறம்பட பணியாற்றினார்.
இதனையடுத்து புதிய ராணுவ மந்திரியாக கிராண்ட் ஷாப்சை நியமித்து பிரதமர் ரிஷி சுனக் உத்தரவிட்டுள்ளார். இவர் பிரதமர் ரிஷி சுனக்கின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் உள்ளவர் என அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.