ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் அடுத்தடுத்து கடுமையான நிலநடுக்கம்; காஷ்மீரிலும் உணரப்பட்டது

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் அடுத்தடுத்து கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதுடன் காஷ்மீரிலும் உணரப்பட்டு உள்ளது.

Update: 2023-05-28 09:27 GMT

கைபர் பக்துன்குவா,

ஆப்கானிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் எல்லை பகுதியில், இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது பாகிஸ்தான் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உணரப்பட்டு உள்ளது.

இந்நிலநடுக்கம் காலை 10.50 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 6.0 அளவில் ஏற்பட்டு உள்ளது. அது 223 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டு இருந்தது என பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இதுதவிர, தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டி ஆகிய நகரங்களிலும் கூட நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது என டான்நியூஸ்டி.வி. தெரிவித்து உள்ளது.

இதேபோன்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள செய்தியில், ஆப்கானிஸ்தானின் வடகிழக்கே, படாக்ஷன் மாகாணத்தில் ஜுர்ம் கிராமத்தில் இருந்து 35 கி.மீ. தென்கிழக்கில் ரிக்டரில் 5.2 அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.

ஆப்கானிஸ்தானின் பைசாபாத் நகரில் இன்று காலை 11.19 மணியளவில் ரிக்டரில் 5.2 அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது.

இதனை தொடர்ந்து, ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்திலும், ஸ்ரீநகரிலும் இன்று காலை கடுமையான நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டு உள்ளன என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்