தென்சீனக்கடல் பகுதியில் எல்லையை வரையறுத்துள்ள சீனா
சர்ச்சைக்குரிய தென் சீனக்கடல் பகுதியில் தங்களது எல்லையை வரையறுத்து சீனா வெளியிட்டுள்ளது.;
மணிலா,
தென்சீனக் கடல் பகுதியில் அமைந்துள்ள தாமஸ் ஷோல் பகுதியை சீனா கடந்த 2012-ல் கைப்பற்றியது. இதனை எதிர்த்து பிலிப்பைன்ஸ் சர்வதேச கோர்ட்டில் வழக்கு தொடுத்தது. இதில் தென் சீனக்கடல் பகுதியில் சீன ஆக்கிரமிப்பு செல்லாது என தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் சீனா அதனை மறுத்து வருகிறது.
மேலும் அங்கு செல்லும் பிலிப்பைன்ஸ் மீனவர்கள் மீது சீன கடற்படையினர் தாக்குதல் நடத்துகின்றனர். இதனால் இருதரப்பு இடையே அவ்வப்போது மோதல் ஏற்படுகிறது. இந்தநிலையில் சர்ச்சைக்குரிய தென் சீனக்கடல் பகுதியில் தங்களது எல்லையை வரையறுத்து சீனா வெளியிட்டுள்ளது. இதனால் தென் சீனக்கடல் பகுதியில் பதற்றம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.