மெக்சிகோவில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு

மெக்சிகோவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.;

Update:2024-05-12 19:19 IST

மெக்சிகோ சிட்டி,

வட அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு மெக்சிகோ. அந்நாட்டின் ஷைபஸ் மாகாணத்தில் இன்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.

கவுதமாலா நாட்டின் எல்லையில் அமைந்துள்ள ஷைபஸ் மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால் மக்கள் அச்சமடைந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

அதேவேளை, இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு போன்ற பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

Tags:    

மேலும் செய்திகள்