நிமிடத்தில் 1140 முறை கைதட்டி உலக சாதனை...கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த 20 வயது இளைஞர்
வாஷிங்டன்,
ஒரு நிமிடத்திற்குள் ஆயிரத்து 140 முறை கைதட்டி அமெரிக்கர் உருவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
20 வயதே ஆன டால்டன் மேயர் என்ற இளைஞர் ஒரு நொடிக்கு 19 முறை என்று ஒரு நிமிடத்திற்குள் ஆயிரத்து 140 முறை கைதட்டி உலக சாதனை படைத்துள்ளார். இது குறித்து பேசிய டால்டன், இந்த திறமை தனக்கு இயற்கையாகவே வந்ததாகவும், தான் இந்த சாதனைக்காக பயிற்சி கூட செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.