சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்ற ஓப்பன்ஹெய்மர்

Update: 2024-03-10 23:56 GMT
Live Updates - Page 2
2024-03-11 01:34 GMT

சிறந்த அனிமேஷன் குறும்படம்:

சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான (Best Animated Short) ஆஸ்கர் விருதை வார் இஸ் ஓவர் இன்ஸ்பயர்டு பை தி மியூசில் ஆப் ஜான் அண்ட் யொகொ (War Is Over! Inspired By The Music Of John And Yoko) வென்றுள்ளது.

2024-03-11 01:30 GMT

சிறந்த திரைப்பட தயாரிப்பு வடிவமைப்பு

சிறந்த திரைப்பட தயாரிப்பு வடிவமைப்புக்கான (Best Production Design) ஆஸ்கர் விருதை புவர் திங்ஸ் (Poor Things) திரைப்படம் வென்றுள்ளது.

2024-03-11 01:26 GMT

சிறந்த திரைப்பட எடிட்டிங்:

சிறந்த திரைப்பட எடிட்டிங்கிற்கான (Best Film Editing) ஆஸ்கர் விருதை ஓப்பன்ஹெய்மர் (Oppenheimer) திரைப்படம் வெற்றுள்ளது.

2024-03-11 01:21 GMT

சிறந்த ஆடை அலங்காரம்:

சிறந்த ஆடை அலங்காரத்திற்கான (Best Costume Design) ஆஸ்கர் விருதை புவர் திங்ஸ் (Poor Things) திரைப்படம் வென்றுள்ளது.

2024-03-11 01:20 GMT

சிறந்த சிகை அலங்காரம் மற்றும் ஒப்பனை:

சிறந்த சிகை அலங்காரம் மற்றும் ஒப்பனைக்கான (Best Hair And Makeup) ஆஸ்கர் விருதை புவர் திங்ஸ் (Poor Things) திரைப்படம் வென்றுள்ளது.

2024-03-11 01:16 GMT

சிறந்த காட்சி அமைப்பு

சிறந்த காட்சி அமைப்புக்கான (Best Visual Effects) ஆஸ்கர் விருதை காட்சிலா மைனஸ் ஒன் (Godzilla Minus One) திரைப்படம் வென்றுள்ளது.

2024-03-11 00:58 GMT

சிறந்த துணை நடிகர்

சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை ஓப்பன்ஹெய்மர் படத்திற்காக ராபர்ட் டவ்னி வென்றார்.

2024-03-11 00:53 GMT

சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்ற ‘தி சோன் ஆப் இண்டரஸ்ட்’

சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை ‘தி சோன் ஆப் இண்டரஸ்ட்’ திரைப்படம் வென்றது.

2024-03-11 00:53 GMT

திரைத்துறையில் உலக அளவில் உயரிய விருதாக ஆஸ்கர் உள்ளது. 1929ம் ஆண்டு முதல் ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. சிறந்த திரைப்படம், நடிகர், நடிகை, டைரக்டர், இசையமைப்பாளர் உள்பட பல்வேறு பிரிவுகளில் ஆஸ்கர் விருது வழங்கப்படுகிறது.

இந்நிலையில், 96வது ஆஸ்கர் விருது நிகழ்ச்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டொல்பி திரையரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆஸ்கர் விருது விழாவிற்கு வருகை தந்த பிரபலங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக திரைப்பிரபலங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் குவிந்துள்ளனர். ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில் சிறந்த திரைப்படம், சிறந்த டைரக்டர் உள்பட பல்வேறு பிரிவுகளில் கிறிஸ்டோபர் நோலனின் ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் அதிக ஆஸ்கர் விருதுகளை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது பல்வேறு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சுமார் 2 மணி நேரம் விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்