அமெரிக்காவில் அடிமைத்தன ஒழிப்பு தின கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு - 6 பேர் படுகாயம்

மில்வாக்கி நகரில் நடைபெற்ற அடிமைத்தன ஒழிப்பு தின கொண்டாட்டத்தில் திடீரென துப்பாக்கிச்சூடு நடந்தது.

Update: 2023-06-20 15:03 GMT

Image Courtesy : AFP

வாஷிங்டன்,

அமெரிக்காவில் அடிமைகளாக நடத்தப்பட்ட ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் விடுதலை பெற்றதை குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 19-ந்தேதி 'ஜூண்டீந்த்' தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெக்சாஸ் மாகாண மேயர் கார்டான் கிரேஞ்சர் 1865-ம் ஆண்டு அந்த மாகாணத்தில் உள்ள ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் விடுதலையை பிரகடனம் செய்தார். அதன் நினைவாக இந்த தினம் அனுசரிக்கப்பட்டு

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் அடிமைகளாக இருந்த ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் விடுதலையை கடந்த 1865-ம் ஆண்டு ஜூன் 19-ந்தேதி மேயர் கார்டான் கிரேஞ்சர் என்பர் பிரகடனம் செய்தார். இதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 19-ந்தேதி 'ஜூண்டீந்த்' என்ற பெயரில் அடிமைத்தன ஒழிப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கடந்த 2021-ம் ஆண்டு ஜோ பைடன் தலைமையிலான அரசு இந்த தினத்தை தேசிய விடுமுறை நாளாக அறிவித்தது. இந்த தினத்தை அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் மக்கள் ஒன்றாக சேர்ந்து கொண்டாடி வருகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த கொண்டாட்டங்களில் கலந்து கொள்கின்றனர்.

அந்த வகையில் அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள மில்வாக்கி நகரில் நடைபெற்ற 'ஜூண்டீந்த்' அடிமைத்தன ஒழிப்பு தின கொண்டாட்டத்தில் திடீரென துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் சிறுவர், சிறுமிகள் உள்பட 6 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 17 வயது சிறுவன் மீது போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்