சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் திடீர் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவு..!
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள மேர்காங் நகரத்தில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
பெய்ஜிங்,
தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள அபா திபெத்தியன்-கியாங் தன்னாட்சி மாகாணத்தின் மேர்காங் நகரத்தில் பெய்ஜிங் நேரப்படி, வெள்ளிக்கிழமை காலை 00:03 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதாக சீனா நிலநடுக்கவியல் அமைப்பு மையம் (சிஇஎன்சி) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 32.27 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 101.82 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் ஏற்பட்டதாகவும் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவானதாகவும் சீனா நிலநடுக்கவியல் அமைப்பு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஜூன் 8 அன்று, சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில் 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. பிற்பகல் 2:52 மணியளவில் பிஷான் மாவட்டத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் மையம் தரைப்பகுதியிலிருந்து 10 கிமீ ஆழத்தில் அமைந்திருந்தது.