சீனாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவு..!

சீனாவின் ஜின் ஜியாங் மாகாணத்தில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.;

Update:2022-07-02 07:15 IST

பெய்ஜிங்,

சீனாவின் ஜின் ஜியாங் மாகாணத்தில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

10 கிலோ மீட்டர் ஆழம் கொண்ட இந்த நிலநடுக்கம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள், சேதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்