தென்கொாியாவின் புளு ஹவுஸ் 74 ஆண்டுகளுக்கு பின் திறப்பு: பொதுமக்கள் பார்வையிட அனுமதி

தென்கொாியாவின் சியோல் நகாில் புளு ஹவுஸ் எனப்படும் ஜனாதிபதி மாளிகை உள்ளது.;

Update:2022-05-18 13:08 IST
சியோல்,

தென்கொாியாவின் சியோல் நகாில் புளு ஹவுஸ் எனப்படும் ஜனாதிபதி மாளிகை உள்ளது. இந்த ஜனாதிபதி மாளிகை  அதிக பாதுகாப்பான மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த மாளிகையின் கூரை ஓடுகள் நீல நிறத்தினால் ஆனவை. எனவே இந்த மாளிகைக்கு புளு ஹவுஸ் என பெயாிடப்பட்டது.

இந்த மாளிகைளை பொதுமக்கள் பாா்வையிடுவதற்கு கடந்த 74 ஆண்டுகளாக அனுமதி அளிக்கப்பட வில்லை. 

இந்தநிலையில்,  தென்கொாியாவின் புதிய ஜனாதிபதியாக யூன் சியோக்-யூல் கடந்த 10-ந் தேதி பதவியேற்றாா். அவா் தனது அலுவலகத்தை புளு ஹவுஸில் இருந்து 5 கிலோமீட்டா் தொலைவில் உள்ள யோங்சான் மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு அமைச்சக வளாகத்தில் மாற்றியுள்ளார்.  தற்போது இதனை பாா்வையிட பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

புளு ஹவுஸ் வளாகம் ஒரு கண்காட்சி போல மாறியுள்ளது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று பாா்வையிட்டு வருகின்றனா். ஒரு நாளைக்கு அதிகபட்சம் 39,000 பேர் பார்வையிட அனுமதி அளித்துள்ளனா்.

ஜப்பான் நாட்டின் காலனி ஆதிக்கத்தின் கீழ் கொாிய தீபகற்பம் இருந்த போது கவா்னல் ஜெனரலுக்கான புளு ஹவுஸ் இல்லத்தை கட்டினாா்கள். அதன்பிறகு அமொிக்காவின் கட்டுப்பாட்டில் சிறிது காலம் இந்த பகுதி இருந்தது. அதன்பிறகு தென் கொரியாவின் அதிகாரப்பூர்வ ஜனாதிபதி அலுவலகமாக மாறியது.

மேலும் செய்திகள்