போரை உடனடியாக நிறுத்துங்கள்- புதினுக்கு டுவிட்டர் மூலம் கோரிக்கை விடுத்த அர்னால்டு

இன்ஸ்டாகிராம், டுவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்கள் ரஷியாவில் தடை செய்யப்பட்டுள்ளன.

Update: 2022-03-18 01:23 GMT
வாஷிங்டன், 

பிரபல ஹாலிவுட் நடிகர் மற்றும்  குடியரசு கட்சியைச் சேர்ந்த கலிபோர்னியா மாகாணத்தின் முன்னாள் ஆளுநர்  அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர். இவர் உக்ரைன் - ரஷியா போர் குறித்து ரஷிய மக்களுக்கு ரஷியாவில் தடை செய்யப்பட்டுள்ள சமூக  வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் மூலம் வீடியோ வெளியிட்டு கருத்து தெரிவித்துள்ளார்.

ரஷிய மக்களுக்கு அவர் விடுத்துள்ள உருக்கமான பதிவில் தெரிவித்திருப்பதாவது :

இன்று நான் உங்களிடம் பேசுகிறேன், ஏனென்றால் உலகில் நடக்கும் பல உண்மை சம்பவங்கள்  உங்களிடமிருந்து மறைக்கப்படுகின்றன, நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயங்கரமான விஷயங்கள் இன்னும் நிறைய உள்ளன.

 ரஷிய மக்களின் பலம் எனக்கு எப்போதும் உத்வேகத்தை அளித்து உள்ளது. அதனால்தான் உக்ரைனில் நடந்த போரைப் பற்றிய உண்மையைச் சொல்ல நீங்கள் அனுமதிப்பீர்கள் என்று நம்புகிறேன். ரஷியா தான் இந்த  இந்தப் போரைத் தொடங்கியது. இது ரஷிய மக்களின் போர் அல்ல.

இதன் பிறகு  ரஷிய ராணுவ படையை சேர்ந்த வீரர்களுக்கு அவர் விடுத்துள்ள வேண்டுகோளில், " இது சட்டவிரோதமான போர். இது உங்கள் முன்னோர்கள்    ரஷியாவைக் காப்பதற்காக நடத்திய போர் அல்ல என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

இந்தப் போரைத் நீங்கள் தான் தொடங்கினீர்கள். நீங்கள் இந்தப் போரை முன் எடுத்து செல்கிறீர்கள். நீங்கள் நினைத்தால் இந்தப் போரை உங்களால் நிறுத்த முடியும் " என அவர் புதினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்