இங்கிலாந்து ராணுவ தளபதிக்கு கொரோனா: தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை

இங்கிலாந்து ராணுவ தளபதிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைதொடர்ந்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Update: 2021-06-29 02:50 GMT
கோப்புப்படம்
லண்டன், 

இங்கிலாந்து ராணுவத்தில் ஆயுத படைகளின் தளபதியாக இருந்து வருபவர் நிக் கார்ட்டர். 62 வயதான இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படுவதற்கு முன்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ராணுவ தளபதி நிக் கார்ட்டர் மூத்த ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினர்.

இந்தக் கூட்டத்தில் ராணுவ மந்திரி பென் வாலஸ், ஆயுத படைகளின் துணை தளபதி கார்லேடன் ஸ்மித் மற்றும் ராணுவ படை பிரிவுகளின் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த சூழலில் ராணுவ தளபதிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவருடன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற ராணுவ மந்திரி உள்பட மூத்த ராணுவ அதிகாரிகள் அனைவரும் 10 நாட்கள் தங்களை தாமே தனிமைப்படுத்திக் கொள்ள சுகாதார துறை அமைச்சகம் அறிவுறுத்தியது. அதன்படி ராணுவ மந்திரி பென் வாலஸ் உட்பட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்