பிரேசில் அதிபருக்கு அறுவை சிகிச்சை

பிரேசில் அதிபர் ஜெயீர் போல்சனாரோ கடந்த சில வாரங்களாக சிறுநீரக பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார்.

Update: 2020-09-27 22:00 GMT
பிரேசிலியா,

பிரேசில் அதிபர் ஜெயீர் போல்சனாரோ கடந்த சில வாரங்களாக சிறுநீரக பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை நேரங்களில் அவரது சிறுநீரகத்தில் கல் இருப்பது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து சாவ் பாலோ நகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நேற்று முன்தினம் அறுவை சிகிச்சை நடந்தது. இதில் அவரது சிறுநீரகத்தில் இருந்த கல் அகற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நேற்று அவர் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார். அதிபர் ஜெயீர் போல்சனாரோ முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் அவருக்கு வேறு எந்த பிரச்சினையும் இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அதிபர் ஜெயீர் போல்சனாரோ கடந்த 2018-ல் இருந்து தற்போது வரை 6 முறை அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். 2018-ல் அதிபர் தேர்தலின்போது அவர் கத்தியால் குத்தப்பட்டதும் இதற்காக அவர் 5 முறை அறுவை சிகிச்சை மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிபர் ஜெயீர் போல்சனாரோ கொரோனா தொற்றுக்கு ஆளானதும் 2 வாரங்களுக்கு பிறகு அதிலிருந்து குணமடைந்ததும் நினைவுகூரத்தக்கது.

மேலும் செய்திகள்