ரஷியாவில் 4 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

ரஷியாவில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 3,96,575 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-05-30 11:25 GMT
மாஸ்கோ,

ரஷிய நாட்டையும் கொரோனா வைரஸ் விட்டு வைக்கவில்லை. அங்கு தாமதமாகவும், மெதுவாகவும் பரவத் தொடங்கிய அந்த வைரஸ், இப்போது காட்டுத்தீ போல பரவி வருகிறது. 

இந்தநிலையில் ரஷியாவில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல் வெளியாகியுள்ளன. இதன்படி, அந்த நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,952 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 3,96,575 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ள நாடுகளில் ரஷியா தற்போது 3-வது இடத்தில் உள்ளது.

மேலும் 181 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 4,555 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், 8,212 பேர் குணமடைந்ததையடுத்து, மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,67,469 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்