அர்ஜென்டினாவில் மக்கள் வீடுகளில் தங்கியிருக்க அதிபர் உத்தரவு

அர்ஜென்டினாவில் மக்கள் வீடுகளில் தங்கியிருக்க அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2020-03-20 22:46 GMT
பியுனோஸ் அர்ஸ்,

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜென்டினாவில் 3 பேர் கொரேனாவுக்கு பலியாகி விட்டனர். 97 பேர் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதனால் நாடு முழுவதும் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் கட்டாய தனிமைப்படுத்துதல் நடவடிக்கை அறிவிக்கப்பட்டு உள்ளது. மக்கள் அனைவரும் வருகிற 31-ந்தேதி வரை தங்கள் வீடுகளிலேயே தங்கியிருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டு உள்ளது. யாரும் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என்றும், தங்களை கட்டாயமாக தனிமைப்படுத்தி இருக்க வேண்டும் எனவும் அதிபர் ஆல்பர்ட்டோ பெர்னாண்டஸ் அறிவித்தார். எனினும் மக்கள் கடைகளுக்கும், மருந்தகங்களுக்கும் சென்று வரலாம் எனக்கூறிய அவர், ஆனால் தேவையின்றி யாரும் வெளியில் நடமாடக்கூடாது எனவும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்