‘பொருளாதார தடைகளை ரத்து செய்ய வேண்டும்’ - பிரிக்ஸ் நாடுகளுக்கு ர‌ஷிய எம்.பி. வேண்டுகோள்

பொருளாதார தடைகளை ரத்து செய்ய வேண்டும் என பிரிக்ஸ் நாடுகளுக்கு ர‌ஷிய எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2020-03-18 23:18 GMT
மாஸ்கோ,

உலகளவில் பொருளாதார மந்த நிலை நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கொரோனா வைரஸ் ருத்ரதாண்டவமாடி வருகிறது.

இந்த நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அங்கீகரிக்காத அனைத்து பொருளாதார தடைகளையும் பிரிக்ஸ் நாடுகள் ரத்து செய்ய வேண்டும் என்று ர‌ஷிய நாடாளுமன்ற மேல்சபை உறுப்பினரும், வெளிவிவகாரங்கள் குழு தலைவருமான காஸ்டன்டின் கொசசேவ் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் குறிப்பிடுகையில், ‘‘ ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிமுகப்படுத்தியதைத் தவிர பிற பொருளாதார தடைகளை ஒரே நேரத்தில் முழுமையாக விலக்கிகொள்வதற்கான தருணம் வந்துள்ளது’’ என கூறி உள்ளார்.

முதலில் ஜி-20 நாடுகளின் ஆதரவுடன் இதை பிரிக்ஸ் நாடுகள் தொடங்கி வைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பிரிக்ஸ் நாடுகள் அமைப்பில் பிரேசில், ர‌ஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்