ஓடுபாதையில் இருந்து விமானம் விலகி விபத்து நேபாள விமான நிலையம் மூடல்
நேபாள நாட்டில் விமான போக்குவரத்து, மோசமான நிலையில் இருக்கிறது. அந்நாட்டின் விமானங்களிலும், விமான நிலையங்களிலும் பாதுகாப்பு அம்சங்கள் முறையாக கடைப் பிடிக்கப்படாததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.;
காத்மாண்டு,
நேபாள நாட்டில் விமான போக்குவரத்து, மோசமான நிலையில் இருக்கிறது. அந்நாட்டின் விமானங்களிலும், விமான நிலையங்களிலும் பாதுகாப்பு அம்சங்கள் முறையாக கடைப் பிடிக்கப்படாததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இதனால் நேபாள நாட்டின் விமானங்கள் தங்கள் வான்பரப்பில் நுழைய ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் தடைவிதித்துள்ளன.
இந்த நிலையில் அந்நாட்டில் உள்ள ஒரே ஒரு சர்வதேச விமான நிலையமான காத்மாண்டு விமான நிலையத்துக்கு, நேற்று காலை 66 பயணிகளுடன் உள்ளூர் விமானம் ஒன்று வந்தது. விமான நிலையத்தில் தரையிறங்கியபோது, ஓடுபாதையில் சறுக்கிய விமானம் 15 மீட்டர் தூரம் சென்று, புல்வெளி பகுதியில் பாய்ந்தது.
இந்த சம்பவத்தில் விமானத்தில் இருந்த பயணிகள் 2 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து காரணமாக விமான நிலையத்தில் மற்ற விமானங்கள் புறப்பட்டு செல்வது மற்றும் தரையிறங்குவதில் சிக்கல் எழுந்தது.
இதையடுத்து, காத்மாண்டு சர்வதேச விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டது.